நீலகிரி : கூடலூரில் ஆதிவாசி கிராமங்களில் வன உரிமை சட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடுகள் கட்டி கொடுப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலுர் பகுதிகளில் வசிக்கும் ஆதிவாசி கிராமங்களில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, 2006 வனஉரிமை சட்டத்தின்கீழ் 1,200 வீடுகள் கட்டவும், தமிழக அரசின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ தாயகம் திரும்பியோர் குடும்பங்களுக்கு 520 வீடுகள் கட்டித் தரவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் வாழும் ஆதிவாசி குடும்பங்கள் பெரும்பாலும் மிகவும் வசதி குறைந்தவர்களாகவும், போதிய இருப்பிட வசதி இல்லாத நிலையிலும் உள்ளனர். இவர்களுக்கு மத்திய அரசு திட்டத்தின் கீழ் நக்சல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அரசு செலவில் கட்டித் தர உள்ள வீடுகளுக்கு தலா ரூ 2.10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் இவர்களுக்கு வீடு கட்ட இந்த தொகை போதாது என்றும், அதனை உயர்த்தி வழங்கவும் கோரிக்கை எழுந்தது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து அதிகாரிகள் பயனாளிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முடிவில் இது குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பி, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. மேலும், தாயகம் திரும்பியவர்களுக்காக அரசு அறிவித்துள்ள ஆயிரம் வீடுகளில் 520 வீடுகள் நீலகிரி மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், வீடுகள் கட்ட பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசிலனை செய்யப்பட்டு தகுதியானவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மேலும், பயனாளிகள் வசதிக்கு ஏற்ப அவர்கள் சொந்தமாகவோ அல்லது ஒப்பந்ததாரர் மூலமாகவோ வீடுகள் கட்டிக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகையன், திட்ட இயக்குனர் பாபு, உதவி இயக்குனர் ஊராட்சி காசிநாதன் மற்றும் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலர்கள் பயனாளிகள் என பலர் கலந்து கொண்டனர்.