திருப்பூர் : திருப்பூரில் வீட்டில் தனியாக இருந்த விவசாயி, உடலில் காயங்களுடன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சுப்பிரமணி. அவரது மனைவி ராதிகா கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், சுப்பிரமணி மட்டும் தனியாக பாலன் நகர் பகுதியில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வந்தார். இதனிடையே, இன்று காலை சுப்பிரமணியின் தாயார் வழக்கம்போல அவருக்கு காலை உணவு கொண்டு சென்றபோது, வீட்டின் கதவு திறந்திருந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது சுப்பிரமணியின் கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்டிருந்த நிலையில், தலையில் காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அக்கம்பக்கத்தினருக்கு தகவல் அளித்து, பின்னர் போலீசாருக்கு தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவ இடத்தில் மாநகர காவல்துணை ஆணையர் உமா விசாரனை நடத்தினர். தொடர்ந்து, சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.