கோவை : பீளமேடு பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்து வந்த கும்பலை போலீசார் கைது செய்த நிலையில், அவர்களைக் குண்டர் சட்டத்தில் அடைக்கக் கோவை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை, அவினாசி சாலையில் உள்ள பீளமேடு பகுதியில் பல்வேறு கல்லூரிகள் உள்ளன. இங்குப் பயிலும் மாணவர்களுக்குச் சமூக விரோத கும்பல்கள் கஞ்சா விற்பனைச் செய்து வருவதாகக் கோவை மாநகர காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இத்தகவல்களின்படி, கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் கஞ்சா விற்பனைச் செய்பவர்களை பிடிக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, போலீசார் தனிப்படை அமைத்து பீளமேடு சுற்றுவட்டாரத்தின் செயல்பாடுகளைக் கண்காணித்து வந்தனர். அதில் கிடைத்த தகவல்களின்படி சிலரை போலீசார் கைது செய்தனர். இருப்பினும், அங்கு கஞ்சா விற்பனை குறையவில்லை. மேலும், தொடர்ந்த விசாரணையில் கோவைக்கு கஞ்சா பெரும்பாலும் ஆந்திராவிலிருந்து வருவது தெரிய வந்தது.
இந்நிலையில், கோவை கொடிசியா சாலையில் உள்ள மண்டல அறிவியல் அலுவலகம் அருகே, வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சாவை கொண்டு வந்து விற்றவர்களை போலீசார் மடக்கிப்பிடித்தனர். இதில், மதுரையைச் சேர்ந்த சக்திவேல்(49), அவரது தங்கை ஈஸ்வரி (44), அசோக் (31), கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த கோகுல கண்ணன்(23), அதே பகுதியை சேர்ந்த முகமது ரபிக் (23), ஆவாரம் பாளையத்தைச் சேர்ந்த தினேஷ் பாபு (24), அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன் (24), குனியமுத்தூரைச் சேர்ந்த முஜிப் ரகுமான் ஆகியோரைத் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர்.
அப்போது, முஜிப் ரகுமான் உள்ளிட்ட 3 பேர் காவல்துறையிடமிருந்து தப்பி ஓட, மீதமிருந்த நபர்களை போலீசார் கைது செய்தனர். பின்பு அவர்களிடமிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களை போலீசார் சோதனை செய்தனர். அதிலிருந்து சுமார் 110 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைப்பற்றட்ட ஆதாரங்களின் அடிப்படையில் போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கல்லூரி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக அந்தக் கும்பலை கோவை மாநகர காவல்துறை துணை ஆணையாளர் (சட்டம் ஒழுங்கு) பாலாஜி சரவணன் அவர்களின் பரிந்துரையின் பேரில், கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் குண்டர் சட்டத்தில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளிகளான சக்திவேல், முஜிப் ரகுமான், முத்துலட்சுமி ஆகிய 3 பேரையும் தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.