கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் காட்டு யானை விநாயகனை அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சியர் ஹரிஹரனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

தடாகம் பகுதியில் விவசாயப் பயிர்களுக்கு சேதம் விளைவித்து வரும் காட்டு யானை 'விநாயகனை' அப்புறப்படுத்துமாறு வெகுநாட்களாகவே விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும், வனத்துறை அதிகாரிகள் காட்டு யானைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ளவில்லை.

இதையடுத்து, இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் காட்டு யானையை வெளியேற்றும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டுமெனக் கோரி, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் விவசாயிகள், வனத்துறை அதிகாரிகள் எங்களின் வாழ்வாதாரப் பிரச்சினையில் மந்தமான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள் என குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, காட்டு யானையை அப்புறப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை வனத்துறை அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், விவசாயப்பயிர்களை பாதிக்கும் வெள்ளை ஈ தாக்குதல், விவசாயிகளுக்கான வங்கி கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு வகையான கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டது.