வன விலங்குகள் ஏற்படுத்தும் பயிர் சேதத்திற்கும் பயிர்க் காப்பீடு

கோவை : மனித-விலங்கு மோதல்களில் சேதத்திற்குள்ளாகும் பயிர்களுக்கு இழப்பீடு தரும் புதிய திட்டம் மத்திய வேளாண் அமைச்சகத்தால் கொண்டு வரப்பட்டுள்ளது.

கோவை : மனித-விலங்கு மோதல்களில் சேதத்திற்குள்ளாகும் பயிர்களுக்கு இழப்பீடு தரும் புதிய திட்டம் மத்திய வேளாண் அமைச்சகத்தால் கொண்டு வரப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு விளைவிக்கும் பயிர்கள் இயற்கைச் சீற்றங்களாலும், பருவமழை பொய்ப்பிலும் இழப்பைச் சந்திக்கக் கூடாது என்பதற்காக விவசாயிகளுக்கான பயிர்க் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் வெகுநாட்களாக விலங்குகளால் ஏற்படும் சேதத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும்படியும் கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தனர்.

இதையெடுத்து, இந்திய மத்திய வேளாண் அமைச்சகம் வனவிலங்குகளால் பாதிக்கப்படும் பயிர்களுக்கான நஷ்டத்தை ஈடு செய்ய பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது. கடந்த புதன் கிழமை, பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலைமையை அடிப்படையாகக் கொண்டு இதன் வரையறைகள் எழுதப்பட்டது.



மனித-விலங்கு மோதல்களின் விளைவாக ஏற்படும் கால்நடையின் எண்ணிக்கையை விடப் பயிர் சேதங்களின் அளவு அதிகமாகவுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு நேரும் பாதிப்புகளை குறைக்கும் விதமாக மத்திய அரசு இத்திட்டதினை அறிவித்துள்ளது.

மேலும், மத்திய வேளான் அமைச்சகம், "இம்முறை காப்பீட்டு நிறுவனம் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் 10% கடன் அல்லாத விவசாயிகளை இணைக்க வேண்டும். பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மொத்த பிரீமியத்தில் 0.5% வரை செலவிடலாம்." என்று தெரிவித்துள்ளது.

கோவையைச் சேர்ந்த விவசாயிகள் இது குறித்து கூறுகையில், "இதுவரையிலும் பயிர் இழப்பீடுகளே எங்களுக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்ததில்லை. எனவே, இது போன்ற புதுத் திட்டங்களை நம்புவது சிரமமாக உள்ளது", என்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...