திருப்பூர் : திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களின் 60 ஆண்டு கால கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை ஏலத்தில் எடுக்கும் அறிவிப்பை அரசு வெளியிட்டிருக்கிறது.
திருப்பூர் : திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களின் 60 ஆண்டு கால கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை ஏலத்தில் எடுக்கும் அறிவிப்பை அரசு வெளியிட்டிருக்கிறது.

அரசு வெளியிட்டுள்ள ஒப்பந்த அறிக்கையின் சாரம் இதுதான் :- பொதுப்பணி துறையில் இந்தச் சிறப்புத்திட்டத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள மேற்பார்வை பொறியாளரிடம், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் ஒப்பந்த விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ளலாம். இந்தப் படிவங்கள் நவம்பர் 30 முதல் வரும் ஆண்டின் ஜனவரி 22 வரை வழங்கப்படும்.

இத்திட்டத்தினை எடுத்து நடத்த விரும்பும் நிறுவனங்கள் ஜனவரி 23-ம் தேதி 3 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். தகுதியான நிறுவனம் அன்று மாலைக்குள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும்.

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் ரூ. 1,532 கோடி மதிப்புள்ளது. இந்தத் திட்டத்தினை ஏலமெடுக்கும் ஒப்பந்ததாரர் டி.ஓ.பி.டி அடிப்படையில் இதனைச் செயல்படுத்தி, சுமார் 60 மாதங்கள் வரை அதன் பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். மேலும், இந்தத் திட்டத்தினை 34 மாதங்களுக்குள் செய்து முடிக்க வேண்டும், எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

நிலத்தடி நீர் மட்டத்தை மீட்டெடுக்கும் நோக்கமே கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வறட்சியான பகுதிகளில் நீர்ப்பாசனத்தை அதிகரிப்பதே ஆகும். இத்திட்டத்தின் மூலம் 24,468 ஏக்கர் நிலப்பகுதிகளின் குடிநீர் தட்டுப்பாடு முடிவுக்கு வரும்.

அத்திகாவு-அவினாசி கூட்டமைப்பின் தலைவர் டி.பிரபு கூறுகையில், " இந்தத் திட்டத்திற்காக ஐந்து சகாப்தங்களாக விவசாயிகள் காத்திருந்தனர். இனித் திட்டத்தில் கூறிய அனைத்து செயல்பாடுகளையும் முழுமையாகச் செய்து முடிப்பதே விவசாயிகளுக்குத் தேவை" என்கிறார்.