திருவனந்தபுரம் : கஞ்சிக்கோடு பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் ரயில் மோதி ஆண் யானை உயிரிழந்துள்ளது.
திருவனந்தபுரம் : கஞ்சிக்கோடு பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் ரயில் மோதி ஆண் யானை உயிரிழந்துள்ளது.
தமிழக கேரளா எல்லையோரம் அமைந்து உள்ள கஞ்சிக்கோடு வனப்பகுதியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற யானை ரயில் மோதி உயிரிழந்துள்ளது. வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினர் யானை உயிரிழந்து கிடப்பதை எதேச்சையாகக் கண்டு, ரயில்வேக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே அதிகாரிகள் இந்த விபத்தினை குறித்து விசாரித்து வருகின்றனர். ஆனால், இதுவரையிலும் எந்த ரயில் மோதியதில் யானை உயிரிழந்தது என்பது குறித்த தகவல் ரயில்வே துறை அதிகாரிகளுக்கு தெரியவில்லை.

மேலும், இரவு முதல் அதிகாலை வரை அவ்வழியாகச் சென்ற ரயில் ஓட்டுனர்களிடம் இது குறித்து தற்போது கேரள ரயில்வே துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, யானையை பிரேதப் பரிசோதனை செய்யும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக ரயில் விபத்துகளில் யானை உயிரிழப்பு குறைந்து வந்த சூழலில், மீண்டும் ஒரு ஆண் யானை உயிரிழந்த சம்பவம் வனத்துறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.