திருப்பூர் : காவல்துறையினருக்கு மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான நிறைவாழ்வு பயிற்சியினை மாநகர காவல் ஆணையர் மனோகரன் தொடங்கி வைத்தார்.

கடந்த வாரம் தமிழக முதல்வர் தொடங்கி வைத்த நிறைவாழ்வு நிகழ்ச்சியினை, திருப்பூரில் தமிழ்நாடு காவல்துறை மற்றும் பெங்களூரை சேர்ந்த தேசிய மனநலம் மற்றும் அறிவியல் நிறுவனம் இணைந்து வழங்குகிறது. இப்பயிற்சி வகுப்பினை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் மனோகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில்," இந்தப் பயிற்சியில் மன அழுத்தத்தை குறைப்பது, பணியினை நேசித்துப் பணியாற்றுவது , பொதுநலம் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. காவல்துறையினருக்கு மட்டுமல்லாது காவல்துறையினரின் குடும்பத்தினருக்கும் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது," என்றார்.

தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ள நிறைவாழ்வு பயிற்சி வகுப்பில் ஏராளமான காவல்துறையினர் இன்று கலந்து கொண்டனர்.