சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய இயந்திரவியல் துறையை சேர்ந்த ரயில் ஓட்டுனர்களுக்கு சான்றிதழ் வழங்கி தென்னக ரயில்வே பொதுமேலாளர் ஆர்.கே. குல்ஷேத்ரா பாராட்டு தெரிவித்தார்.

கடந்த நவம்பர் மாதம் 5-ம் தேதி சேலம் கோட்டத்தை சேர்ந்த ரயில் ஓட்டுனர்கள் அருண்குமார் மற்றும் அசிம் அகமது ஆகியோர் ஈரோடில் இருந்து ஜோலார்பேட்டை மார்க்கமாக கூட்ஸ் ரயிலை ஓட்டினார். கூட்ஸ் ரயில் வேலூர் மாவட்டம் காங்கரை ரயில் நிலையம் அருகே சென்றது. அப்போது, தண்டவாளத்தில் பெரும் அதிர்வு ஏற்படுதை ஓட்டுனர்கள் உணர்ந்தனர். இதைப்பற்றி உடனடியாக நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, நிலைய மேலாளர் சேலம் ரயில்வே கோட்டம் கண்ட்ரோல் அறைக்கு தகவல் தெரிவித்தார். சேலம் ரயில்வே கோட்ட ரயில்வே பொறியாளர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை உடனடியாக சரிசெய்தனர். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சிறப்பாக பணியாற்றி சான்றிதழ் பெற்ற ஓட்டுனர்கள் அருண்குமார் மற்றும் அசிம் அகமது ஆகியோரை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் வெகுவாக பாராட்டினார்.