Exclusive: பயணிகள் கவனத்திற்கு! அரசுப் பேருந்துகள் குறித்து இனி வாட்ஸ் ஆப் மூலம் புகார்களை தெரிவிக்கலாம்

கோவை : அரசுப் பேருந்துகளில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பயணிகள் வாட்ஸ் ஆப் மூலம் புகார்களை தெரிவிக்கும் வசதியை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கோவை அறிமுகம் செய்துள்ளது.


கோவை : அரசுப் பேருந்துகளில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பயணிகள் வாட்ஸ் ஆப் மூலம் புகார்களை தெரிவிக்கும் வசதியை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கோவை அறிமுகம் செய்துள்ளது.



தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கோவை பிராந்தியத்தின் கீழ் கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய 4 பிரிவுகள் உள்ளன. இந்த நான்கு பிரிவுகளில் மட்டும் 45 பேருந்து டிப்போக்கள் அமைந்துள்ளன. இந்த டிப்போக்களில் 3,000 பேருந்துகள் ஓடுகின்றன. கோவையில் மட்டும் 722 டவுன் பேருந்துகளும், 353 வெளியூர் செல்லும் பேருந்துகளும் என மொத்தம் 1,075 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இவற்றில் பெரும்பாலான பேருந்துகள் 5 லட்சத்திற்கும் அதிகமான கி.மீட்டர்கள் வரை ஓடிவிட்டன. இதனால், பேருந்துகள் பழுதடைந்து பாதியில் நிற்கும் அவலங்களை பயணிகள் நாள்தோறும் சந்தித்து வருகின்றனர். இதனிடையே, தமிழக அரசு அண்மையில் 155 புதிய பேருந்துகளை அறிவித்தது. அதில், 73 பேருந்துகள் கோவை பிராந்தியத்திற்காக இயக்கப்பட்டு வருகின்றன.



இருப்பினும், முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தினால், அதிகளவு கரும்புகை வெளியிடுதல், மேற்புறத்தில் மழைநீர் ஒழுகுதல் போன்ற பிரச்சினைகளை கொண்ட பேருந்துகளிலேயே பயணிகள் பயணித்து வருகின்றனர். 

எனவே, இதுபோன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், 94425 01920 என்ற எண்ணிற்கு பயணிகள் வாட்ஸ் ஆப் மூலம் புகார்களை தெரிவிக்கும் வசதியை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கோவை அறிமுகம் செய்துள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...