நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இன்று அதிகாலை முதல் கடும் குளிரும், பனி மூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலையில் லேசான சாரல் மழைப் பெய்தது. அதோடு, பனியின் தாக்கமும் அதிகரித்துள்ளது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்படுவதால் மலைப் பகுதிகளில் இருந்து பகல்நேரங்களில் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சமவெளி பகுதிகளுக்கு செல்ல மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறே வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

இந்த காலநிலையினை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டினாலும், அவ்வப்போது வந்து செல்லும் மேக மூட்டம் இயற்கை காட்சிகளை மறைப்பதால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். மேலும், கடும் குளிரின் காரணமாக தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்பட்டது. உதகையில் இரவு துவங்கி இன்று காலை வரையில் 16.2 மில்லி மீட்டர் சாரல் மழைப் பெய்துள்ளது.
இதே போன்று குறைந்தபட்ச வெப்பநிலையாக 11 டிகிரி செல்சியசும், அதிகபட்சமாக 18 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக பகல் நேரத்திலேயே பொதுமக்கள் நெருப்பூட்டி குளிர் காயவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.