கோவை : கோவையில் நகர்ப்புற பல்லுயிர்கள் பாதுகாப்பு மற்றும் கல்வி மையம், கியூப் (CUBE) திட்டத்தின் கீழ் 2018-19-ம் கல்வி ஆண்டுக்கான ஆராய்ச்சி உதவித் தொகையை அறிவித்துள்ளது
கோவை : கோவையில் நகர்ப்புற பல்லுயிர்கள் பாதுகாப்பு மற்றும் கல்வி மையம், கியூப் (CUBE) திட்டத்தின் கீழ் 2018-19-ம் கல்வி ஆண்டுக்கான ஆராய்ச்சி உதவித் தொகையை அறிவித்துள்ளது.
இந்த உதவித் தொகை இளம் ஆராய்ச்சியாளர்களை நகர்ப்புற பல்லுயிர்கள் பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபடும் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அமையும். வழக்கமாக ரூ.15 ஆயிரம் அளிக்கும் இந்த நிதியுதவித்தொகை , இம்முறை ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு கோவை, மதுரை, மலப்புரம், சங்கனாச்சேரி, கோட்டையம், மும்பை, புனே, புது டெல்லி, பஸ்தி, குவஹாத்தி, காசர்கோடு உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து 30 வகையான திட்டங்கள், நிதியுதவித் தொகைக்காக விண்ணப்பிக்கப்பட்டிருந்தன. அதில் இரண்டு திட்டங்கள் மட்டுமே தேர்வாகி, ஒவ்வொன்றும் தலா ரூ.15 ஆயிரம் உதவித் தொகையை பெற்றன.
இதைப்போல, பல்லுயிர் பெருக்கத்தின் முன்மாதிரியாகத் திகழும் கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள நகர்ப்புற பல்லுயிர்கள் பாதுகாப்பு மற்றும் கல்வி மையம், 2018- 19 கல்வியாண்டில் நகர்ப்புற பல்லுயிர்கள் பாதுகாப்பு திட்டங்களை மேம்படுத்தும் விதமாக மேற்கொள்ளப்படும் சிறந்த இரண்டு ஆய்வுகளுக்கு சி.யூ.பி.இ நிதியுதவித்தொகையை வழங்கவுள்ளது.
மேலும், இந்த ஆய்வின் கால அளவை மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை இருப்பது அவசியம்.
இளம் ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் இந்த ஆய்வினை தகுந்த ஆவணங்கள், ஆய்வின் தலைப்பு, அதன் முக்கியத்துவங்கள், பயன்படுத்தவிருக்கும் அறிவியல் முறைகள், பட்ஜெட், வழிகாட்டியின் விபரங்கள், ஆய்வாளரின் ப்யோ டேட்டா உள்ளிட்ட அனைத்து வகையான தகவல்களையும் கல்வி மையத்திற்கு அனுப்பி வைக்கவும்.
இந்த ஆய்வுகளை மேற்கொள்ள விருப்பமுள்ளவர்கள் தகவல்களை [email protected]. என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
மேலும் தகவல்களுக்கு +91 98945-34418, +91 98653-21276.