கோவையில் திருமண வரன்கள் தள்ளிப்போனதால் மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

கோவை : திருமண வரன்கள் தொடர்ந்து தள்ளிப் போனதால் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : திருமண வரன்கள் தொடர்ந்து தள்ளிப் போனதால் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் மனமுடைந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த நல்லகண்ணு என்பவரது மகள் காயத்ரி (23). இவர் தமிழில் எம்.ஏ. பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள், பல்வேறு இடங்களில் மாப்பிள்ளைகளை பார்த்துள்ளனர். அதேபோல, கிட்டத்தட்ட ஐந்திற்கும் மேற்பட்ட மாப்பிள்ளைகள் காயத்ரியை பார்த்துவிட்டு எந்த பதிலும் கூறாமல் சென்றுவிட்டனர். இன்றும் மாப்பிள்ளை வீட்டார் இந்த இளம்பெண்ணை பார்த்துவிட்டு எந்த பதிலும் சொல்லாமல் சென்றுவிட்டனர். 

இதனால் மனம் உடைந்து போன காயத்ரி, வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது கதறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வீட்டில் நுழைந்து காப்பாற்ற முற்பட்டனர். ஆனால், உடல் முழுவதும் எரிந்ததால் இளம்பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் முன்னே உயிரிழந்தார். பின்னர், இவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத கிடங்கில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து செல்வபுரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...