திருப்பூர் : ஜவுளித்துறையில் பிடித்தம் செய்யப்படும் ஜி.எஸ்.டி.யின் ரீபண்ட் தொகையை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்திற்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜி.எஸ்.டி.,ல், ஏற்றுமதியாளர்கள் செலுத்தும் வரி 'ரீபண்ட்' வழங்கப்படுகிறது. திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் நூல், துணி, ஆடை தயாரிப்புக்கான பொருட்கள் வாங்கும்போது, ஜி.எஸ்.டி., செலுத்துகின்றனர். செலுத்தும் வரியில் உள்ள உள்ளீட்டு வரியில் 50 சதவீதத்தை வணிக வரித்துறையும், மீதம் 50 சதவீதத்தை மத்திய ஜி.எஸ்.டி., வரித்துறை திரும்ப வழங்குகின்றன. வணிக வரித்துறை வாயிலாக விண்ணப்பிக்கும் மாநில வரி (எஸ்.ஜி.எஸ்.டி.,) ரீபண்ட் தொகை, அந்தந்த மாவட்ட கருவூலம் வாயிலாக, ஏற்றுமதியாளர்களின் வங்கி கணக்கில் சேர்க்கப்படுகிறது.
ஆனால், கடந்த 3 மாதங்களாக வரவேண்டிய ரீபண்ட் தொகை இன்னும் கிடைக்காமல் ஏற்றுமதியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஜி.எஸ்.டி.யின் ரீபண்ட் தொகையை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்திற்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அதன் தலைவர் எம். சண்முகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- கடந்த 3 மாதங்களாக வரவேண்டிய ரீபண்ட் தொகை 105 கோடி நிலுவையில் இருக்கிறது. இதனால், திருப்பூரில் உள்ள சிறு, குறு நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, ரீபண்ட் தொகை உடனடியாக கிடைத்திட நடவடிக்கை எடுக்குமாறு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி ஜுபின் இராணி மற்றும் மத்திய ஜவுளித்துறை செயலர் ராகவேந்திரா சிங் ஆகியோரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது, இவ்வாறு தெரிவித்துள்ளார்.