கோவை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான எந்திரன் 2-ம் பாகம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வேளையில், 'பேட்டையும் உனக்கு, கோட்டையும் உனக்கு' என அவரது ரசிகர்கள் பஞ்ச் போஸ்டரை ஒட்டியுள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எந்திரன் படத்தின் 2-ம் பாகம் திரைப்படம் இன்று வெளியாகி மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. ரஜினியின் அரசியல் என்ட்ரி செய்திகளுக்கு இடையே தற்போது திரைப்படம் வெளியாகியுள்ளது. தான் அரசியலில் இன்னும் முழுமையாக இறங்கவில்லை என்று ரஜினி அவ்வப்போது ஊடகங்களில் தெரிவித்து வந்தாலும், அவரது ரசிகர்கள் அவரை விடுவதாய் இல்லை.

அந்த வகையில், இன்று '2.ஓ' படத்தை வரவேற்கும் விதமாக, கோவையில் பல்வேறு வகையிலான போஸ்டர்கள் ஓட்டப்பட்டிருந்தன. அதில், ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் வெளிப்பட்டிருந்தன. அதில், 'பேட்டையும் உனக்கு, கோட்டையும் உனக்கு' என்ற வாசகம் அடங்கிய போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தனக்குப் பிடித்த நடிகருக்கு அரியணை கொடுத்து அழகு பார்ப்பது தமிழக மக்களின் வழக்கமான குணம் என்றாலும், தற்போது ரஜினிக்காக ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள் 'பில்டப்' கொஞ்சம் அதிகமாக இருப்பதாகவே தோன்றுகிறது.