சென்னை : கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் துப்புரவு பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு தலா ரூ. 1.000 மதிப்பூதியமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்கப் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகின்றது. புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மறுசீரமைப்பு பணிகளை அமைச்சர்களும் நேரில் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியதாவது :- கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் துப்புரவு பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மதிப்பூதியம் வழங்க ஆணையிட்டுள்ளார். கஜா புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள பல்வேறு மாவட்டங்களுக்குட்பட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளிலிருந்து 2,400 நபர்கள், பேரூராட்சிகளிலிருந்து 1,624 நபர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையிலிருந்து 3,060 நபர்கள் என மொத்தம் 7,084 துப்புரவு பணியாளர்கள் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த துப்புரவு பணியாளர்கள் கடும் பாதிப்படைந்த சூழ்நிலையில் உள்ளூர் மக்களுடன் இணைந்து சிறப்பாக தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.
இப்பணிகளில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களை பாராட்டும் விதமாக, மதிப்பூதியம் வழங்க முதலமைச்சர் ஆணையிட்டனர். இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு துப்புரவு பணியாளர்களுக்கும் ரூ.1,000/- சிறப்பு ஊக்கத் தொகையும், மேலும், அரிசி, போர்வை, லுங்கி உட்பட 16 வகையான பொருட்கள் அடங்கிய பரிசு பெட்டகம் ஒன்றும் வழங்கப்படும், இவ்வாறு தெரிவித்தார்.