நீலகிரி : நீத்தி வனப்பகுதியில் பூமிக்கடியில் புகை வரும் இடத்தில் மரங்கள் சாய்ந்து வரும் நிலையில் முறையான ஆய்வு மேற்கொள்ள அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

உதகை அருகேயுள்ள நீத்தி வனப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பூமிக்கடியில் இருந்து புகை எழுவது வாடிக்கையாக உள்ளது. அடிக்கடி எழும் இப்புகையால் அப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் அனைத்தும் எரிந்து நாசமாகி விடுகிறது. மேலும், அப்பகுதியில் உள்ள கற்பூரமரங்கள் அனைத்தும் கருகி, கீழே விழுந்து விடுகின்றன.

சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் உள்ள மரங்கள் அனைத்தும் தற்போது கருகி விழுந்துவிட்டன. அப்பகுதியில் நிலப்பரப்பும் சற்று தாழ்ந்து காணப்படுகிறது. ஒவ்வொரு முறை புகை எழும் போதெல்லாம், இங்கு பார்வையிட வரும் அதிகாரிகள் அந்த புகையை அணைக்கும் முயற்சியில் மட்டுமே ஈடுபடுகின்றனர்.

புகைவரும் போதேல்லாம் ஆய்விற்காக வரும் புவியியல் துறை அதிகாரிகளும், ஆய்வு நடத்திய பின், நீத்தி வனப்பகுதியில் புவியியல் மாற்றம் ஒன்றுமில்லை. புகை எழுவது சாதாரணமான நிகழ்வு தான் கூறிச் செல்கின்றனர். ஆனால், இப்பகுதியில் அடிக்கடி புகைஎழுவதும், மரங்கள் கருகி விழுவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இதனால், சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள மக்கள் எப்போதும் அச்சத்தில் உள்ளனர். எனவே, நீத்தி பகுதியில் புவியியல் துறையினர் முறையான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். அடிக்கடி புகை வருவதற்கும், மரங்கள் கருகி விழுவதற்குமான காரணத்தை ஆய்வு செய்து தெரிவிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.