கோவை : சரவணம்பட்டியைச் சேர்ந்த பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளியை சி.ஆர்.ஐ. பம்ப் நிறுவனம் தத்தெடுத்துக் கொண்டது.

ஸ்வச் வித்யாலயா புஷ்கர் என்ற திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் உள்ள 3,150 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தரமான குடிநீர், துப்புரவு மற்றும் சுகாதாரம் பற்றிய பயிற்சி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இது தொடர்பான நிகழ்ச்சி கடந்த 22-ம் தேதி நடைபெற்றது. இதில், சரவணம்பட்டி பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ். கலாமணி, தலைமை கல்வி அலுவலர் அய்யண்ணன், மாவட்ட கல்வி அலுவலர் ஆர். கீதா மற்றும் சி.ஆர்.ஐ. பம்ப் நிறுவனத்தின் தலைவர் எஸ். ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, கோவை - சத்தியமங்கலம் சாலையில் உள்ள சரவணம்பட்டியைச் சேர்ந்த பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளியை சி.ஆர்.ஐ. பம்ப் நிறுவனம் தத்தெடுத்துக் கொண்டது. ஏற்கனவே, கல்வி, விளையாட்டு, மழைநீர் சேகரிப்பு, கழிப்பறை மற்றும் விவசாயிகளுக்கான விருது வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சமூதாய மேம்பாட்டு நடவடிக்கைகளை சி.ஆர்.ஐ. பம்ப் நிறுவனம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.