பல்லடத்தில் காங்., ஆலோசனைக் கூட்டத்தில் மோதல் : தொண்டரின் மண்டை உடைப்பால் பரபரப்பு

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் அகில இந்திய செயலாளர் முன்னிலையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், காங்கிரஸ் தொண்டர் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் அகில இந்திய செயலாளர் முன்னிலையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், காங்கிரஸ் தொண்டர் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது. 

பல்லடத்தில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் நியமிக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கோவை சாலையில் உள்ள தனியார் உள்அரங்கத்தில் வடக்கு மாவட்ட தலைவர் கோபி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சஞ்சய் தத் கலந்து கொண்டார். அப்போது, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, வாக்குச்சாவடிகளுக்கு முகவர்கள் நியமனம் செய்வது குறித்து நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.



அதனைத் தொடர்ந்து, வடக்கு மாவட்ட தலைவர் கோபி ஒருதலைபட்சமாக நடப்பதாகவும், அவரது செயல்களில் அதிருப்தி உள்ளதாக தமிழக பொறுப்பாளரான சஞ்சய் தத்திடம் புகார் கூறப்பட்டது. அப்போது, கோபியின் ஆதரவாளர்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், வார்த்தைப் போர் முற்றிய நிலையில், இருக்கைகளை மாறி மாறி எடுத்து வீசிக் கொண்டனர். இதில், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவரது மண்டையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. இதைக் கண்ட சக நிர்வாகிகள் அடிபட்டவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். 



இந்த கைகலப்பால் அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத், நிகழ்ச்சியை அவசர அவசரமாக முடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார். உள்ளரங்களில் நடைபெற்ற கூட்டத்தில் மூத்த நிர்வாகிக்கு மண்டை உடைந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...