நீலகிரி : உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த சாரல் மழை மற்றும் கடும் பனி மூட்டத்தால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், பனியின் தாக்கமும் அதிகரித்துள்ளது. பனிமூட்டம் அதிக அளவு சாலைகளில் காணப்படுவதால், பகல் நேரங்களில் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட சமவெளிப் பகுதிகளுக்கு செல்ல மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளதால், வாகனங்களில் முகப்பு விளக்கு எரிய விட்டபடி செல்ல வேண்டியுள்ளது.

இந்த நிலையில், கடும் குளிரில் தேயிலை தோட்டங்களில் தொழிலாளர்கள் பணிபுரியாமலும், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வீடுகள் மற்றும் விடுதிகளிலேயே முடங்கிக் கிடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.