உதகையில் ரூ. 2.50 கோடி மோசடி செய்த தனியார் நிறுவனம் மீது காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

நீலகிரி : சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் உதகையில் நிதி நிறுவனம் நடத்தி சுமார் ரூ. 2.50 கோடி மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் இன்று நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி : சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் உதகையில் நிதி நிறுவனம் நடத்தி சுமார் ரூ. 2.50 கோடி மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் இன்று நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

சென்னையைச் சேர்ந்த எஸ்.ஜி.எஸ். அக்ரோ ஃபார்ம் என்ற தனியார் நிறுவனம் மாதம் ரூ. 250 செலுத்தினால் 2 வருடத்திற்கு பிறகு 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், மாதம் ஆயிரம் ரூபாய் செலுத்தினால் 2 வருடங்களுக்குப் பிறகு 90 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனக் கூறி விளம்பரம் செய்தது. 



அதன்படி, உதகையில் சுமார் 60-க்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு வருடங்களுக்குப் பிறகு சென்று தங்களது தொகையை அந்நிறுவனத்திடம் கேட்ட போது பணம் வழங்க முடியாது என்றும், அதற்கு பதிலாக அவினாசி, அன்னூர் போன்ற பகுதிகளில் நிலம் தருவதாகக் கூறியுள்ளனர். ஆனால், நிதிநிறுவனம், தொகையை வசூலிக்கும் போது திரும்பப் பணம் தருவதாக உறுதியளித்து விட்டு, தற்போது நிலத்தை வழங்கி மோசடி செய்வதாக பணம் செலுத்தியவர்கள் கூறுகின்றனர். 

இந்த நிலையில், பணத்தை திருப்பி அளிக்காத அக்ரோ ஃபார்ம் நிறுவனத்தின் மீது நீலகிரி மாவட்ட காவல் கணிப்பாளர் சண்முகபிரியாவிடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்தனர். 



மேலும், அவர்கள் தங்களது புகார் மனுவில் கூறியிருப்பதாவது :- பணம் திரும்ப கேட்க இந்நிறுவனத்தின் மேலாளர் ரவிசந்திரனிடம் சென்றால் பணம் தர முடியாது என்று கடுமையான வார்த்தைகளால் திட்டினார். மீறி எங்களிடம் வந்தால் உங்களை எப்படி சந்திக்க வேண்டும் என்று தெரியும் என மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு ஏஜென்ட்டுகளாக பணம் வசூலித்த சுரேஷ் மற்றும் சசி ஆகியோர் உதகை குற்றப்பிரிவில் புகார் அளித்தும், எஸ்.ஜி.எஸ். நிர்வாக இயக்குநர் எந்தவிதத்திலும் தலையிடாமல் தனது பணியாளர்களை வைத்து முதிர்வு தொகை வழங்காமல் காலம் கடத்தி வருகிறார். எனவே, தங்களது பணத்தை திரும்பப் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு கூறியுள்ளனர். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...