கோவை : கோவை விழாவையொட்டி முதல் முறையாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திருவிழா அறிமுகப்படுத்தப்படுகிறது.

11-வது கோவை விழாவில் ஒரு பகுதியாக ஜனவரி 6 மற்றும் 7-ம் தேதிகளில் முதல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திருவிழா (CSTF) நடைபெறவுள்ளது. சி.எஸ்.டி.எஃப் தலைவர் ஜெயபிரசாத் இது குறித்து கூறுகையில், "முதன் முதலாக கோவையில் கொண்டு வரப்படும் இந்த நிகழ்ச்சி நான்கு பிரிவுகளை கொண்டது. பள்ளி, கல்லூரி , தொழிலகங்களில் இருந்து கொண்டு வரப்படும் புதுமையான அறிவியல் படைப்புகள் கண்காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
அடுத்ததாக, தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மற்றும் எதிர்கால போக்கு குறித்த கலந்துரையாடல் நடைபெறும்,"என்றார்.
மாணவர்களின் படைப்புத்திறனையும் விஞ்ஞான அறிவையும் மேம்படுத்தும் இத்திருவிழாவில் தேர்ந்தெடுக்கப்படும் படைப்புக்கு ரூ.3 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படவுள்ளது.
மேலும், தகவலுக்கு இங்கே சொடுக்கவும் www.cstf.co.in