கோவை : கோவையில் மாணவர்களின் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரப் பணியினை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

தமிழக முதல்வர் ஆணையின்படி டிசம்பர் 1-ம் தேதி முதல் ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் தடை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தி அன்னை வேளாங்கண்ணி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மேற்கொள்ளும் பிரச்சாரப் பணியினை மாநகராட்சி ஆணையர் இன்று தொடங்கி வைத்தார்.
அன்னை வேளாங்கண்ணி மேல்நிலைப்பள்ளி சேர்ந்த 30 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து சவுரிபாளையம், உடையாம்பாளையம், உப்பிலிபாளையம், வரதராஜபுரம், புலியகுளம், சிங்காநல்லூர், பீளமேடு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களிடம் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் விநியோகிக்கவுள்ளனர்.
இந்நிகழ்வினை தொடங்கி வைத்த மாநகராட்சி ஆணையர் பேசுகையில், "இதுபோன்ற விழிப்புணர்வு பணிகளை தன்னார்வலர்கள், நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும்," என்றார்.