பொதுஇடங்களில் கூடுகளை அமைத்து அழிந்து வரும் சிட்டுக் குருவி இனங்களுக்கு அடைக்கலம்

கோவை : பல்வேறு காரணங்களினால் அழிந்து வரும் சிட்டுக் குருவி இனங்களைப் பாதுகாக்கும் வகையில், பொதுஇடங்களில் சிறுசிறு கூடுகளை அமைத்து சிட்டுக் குருவிகளின் பாதுகாப்பு அறக்கட்டளை அவற்றிற்கு அடைக்கலம் கொடுத்து வருகிறது.

கோவை : பல்வேறு காரணங்களினால் அழிந்து வரும் சிட்டுக் குருவி இனங்களைப் பாதுகாக்கும் வகையில், பொதுஇடங்களில் சிறுசிறு கூடுகளை அமைத்து சிட்டுக் குருவிகளின் பாதுகாப்பு அறக்கட்டளை அவற்றிற்கு அடைக்கலம் கொடுத்து வருகிறது. 

சிட்டுக் குருவி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். சிட்டுக்குருவிகள் மனிதர்கள் இருக்கும் பகுதிகளிலேயே வசித்தாலும் மனிதர்களோடு பழகுவதில்லை. இருப்பினும், மனிதர்களின் வீடு மற்றும் உணவுகளை அடிப்படையாகக் கொண்டே இந்தக் குருவி இனங்கள் வாழ்ந்து வருகின்றன. மரத்திலும், வீடுகளின் மறைவான இடங்களிலும் வைக்கோல் போன்ற மெல்லிய பொருட்களைக் கொண்டும் கூடு கட்டி வசிக்கின்றன. சுற்றுச்சூழல் மாற்றங்களால் நாம் கண்டு பல்வேறு இழப்புகளில், சிட்டுக்குருவி இனங்களும் ஒன்றாகும். 

தற்போது பல நகர்ப்புறங்களில் இவை முற்றிலுமாக அழிந்துவிட்டன. அலைபேசியில் இருந்து வெளிவரும் மின்காந்த அலைகளின் தாக்கம் இந்த குருவியினத்தின் இனப்பெருக்க மண்டலத்தை தாக்கி அவற்றை மலடாக மாற்றி விடுவதனால், இவற்றால் தங்களின் இனத்தைப் பெருக்க இயலவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

சிட்டுக் குருவி இனத்தை அழியாமல் காக்க வேண்டும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, மார்ச் 20-ம் தேதியை உலக ஊர்க்குருவிகள் தினமாகக் கொண்டாடி, அவற்றைக் காக்கப் போராடி வருகின்றனர். இதனை உணர்த்தும் வகையில் பல நாடுகள் அஞ்சல் தலைகள் வெளியிட்டுப் பெருமைப்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், கோவை குடியிருப்புவாசிகளிடையே சிட்டுக் குருவிகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை "ப்ராஜெக்ட் ஸ்பாரோ' என்ற பெயரில் சிட்டுக் குருவிகளின் பாதுகாப்பு அறக்கட்டளை ஏற்படுத்தி வருகிறது. மேலும், சிட்டுக் குருவிகளின் எண்ணிக்கை கணக்கெடுப்பு போன்ற நடவடிக்கைகளை எடுத்து வரும் அந்த அமைப்பு, குருவிகள் அதிகளவு வந்து செல்லும் பகுதிகளில் செயற்கை கூடுகளைப் பொருத்தி வருகின்றனர். 



உக்கடம் பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம், மதுக்கரை, சுந்தராபுரம், போத்தனூர், ஆத்துப்பாலம், குனியமுத்தூர், வெள்ளலூர், கோவைபுதூர், செட்டிபாளையம், குறும்பபாளையம், கணபதி மற்றும் காந்திபுரம் ஆகிய பகுதிகளில் இந்த செயற்கை கூடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இதில், பெரும்பாலான கூடுகளில் குருவிகள் முட்டையிட்டுள்ளன. இதன்மூலம், மகிழ்ச்சியடைந்துள்ள ஒருங்கிணைப்பாளர்கள், நாள்தோறும் குருவிகளின் நடமாட்டத்தையும், கூடுகளையும் கண்காணித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து, ஆண்டுக்கு ஒருமுறை, குருவிகளின் விவரங்கள் அடங்கிய அறிக்கையை சிட்டுக் குருவிகளின் பாதுகாப்பு அறக்கட்டளையினர் வெளியிட்டு வருகின்றனர். 

உங்களது வீடுகளிலும் சிட்டுக் குருவிகளின் கூடுகளை பொருத்த விரும்பினால், பாண்டியராஜன் என்பவரை +9199433-20303 இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.  

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...