கோவை : கோவையில் மாவட்ட தொழில் மையம் சார்பில் செயல்படுத்தப்படும் புதிய தொழில் முனைவோருக்கான திட்டங்கள் குறித்து அறியச் செய்தியாளர் பயணம் மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட தொழில் மைய சார்பில் தொழில் முனைவோருக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் நீட்ஸ் திட்டமும் அடங்கும். நீட்ஸ் (needs) திட்டத்தின் மூலம் புதிய தொழில் முனைவோர் தொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடனுதவி பெறலாம். இத்திட்டத்தின் கீழ் முறையாகத் தொழிற்கல்வி பயின்றவர்களுக்கு, ரூ. 10 லட்சம் தொடங்கி ரூ. 5 கோடி வரை திட்டத்தில் கடனுதவி வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் கோவையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு, 2015- ம் ஆண்டு கனரா வங்கி ரூ. 16. 79 லட்சம் கடனுதவி வழங்கியது. அதில், பாலமுருகன் காற்று, நீர், மண், ஒலி மாசுபாடு குறித்து ஆய்வு செய்யும் என் ப்ராடக்ட் என்ஜினியர்ஸ் என்ற சுற்றுச்சூழல் மாதிரிகள் ஆய்வு மையத்தைத் தொடங்கினார்.
மூன்று வருடத்திற்கு மேலாக இயங்கிவரும் இந்த ஆய்வு மையத்தை மாவட்ட தொழில் மைய செயலர் ஆர். கண்ணன் இன்று மேற்பார்வையிட்டார்.