சிக்கலுக்கு இனி கிரீன் சிக்னல் : போக்குவரத்து சிக்னல்களில் அதிக பயோ-டாய்லெட்டுகள் அமைக்க ஆலோசனை

கோவை : கோவை மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் பயோ-டாய்லெட்டுகள் அமைக்க கருத்துக் கேட்கப்பட்டு வருவதாகவும், விரைவில் பயோ- டாய்லெட்டுகள் அமைக்கப்படும் என்று கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித் குமார் தெரிவித்துள்ளார்.

கோவை : கோவை மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் பயோ-டாய்லெட்டுகள் அமைக்க கருத்துக் கேட்கப்பட்டு வருவதாகவும், விரைவில் பயோ- டாய்லெட்டுகள் அமைக்கப்படும் என்று கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித் குமார் தெரிவித்துள்ளார்.

மாநகரில் நாளுக்கு நாள் வாகன நெரிசல் அதிகரித்து வரும் சூழலில், ஆங்காங்கே புதிதாக போக்குவரத்து சிக்னல்களையும் அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதோடு அல்லாமல், நிறுவப்பட்ட சிக்னல்களில் போக்குவரத்து காவலர் ஒருவரையும் பணியமர்த்த வேண்டும்.

நாம் பகட்டாய் வாகனங்களில் பயணிக்க போலீசாரின் இந்தப் பணி இன்றியமையாத தேவையாக உள்ளது. ஆனால், சிக்னல்களில் பணியில் இருக்கும் போலீசாருக்கு ஏற்பட்டும் இன்னல்கள் ஏராளம். கரும்புகைக்கு நடுவில், சாதாரண 'பொல்யூஷன் மாஸ்க்' மட்டும் அணிந்து கொண்டும் சிரமப்படும் போலீசார், வெயில் மற்றும் மழைக் காலங்களின் போது அதனைக் கடந்து பல்வேறு வேதனைகளை அனுபவிக்கின்றனர். இதில், தலையாய பிரச்சனை கழிவறை இல்லாதது தான்.

கழிவறை :

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள எந்தப் போக்குவரத்து சிக்னல் அருகிலும் பொதுக் கழிப்பிட வசதி இல்லை. இதன் காரணமாக, அப்பகுதியில் இருக்கும் தனியார் கட்டிடங்களை நாடிச் செல்ல வேண்டிய சூழல் போலீசாருக்கு ஏற்படுகிறது. சில பொதுமக்கள் அனுமதி அளித்தாலும், பலர் இதற்கு அனுமதியளிப்பதில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர் காவலர்கள்.

மாதவிடாய் காலங்களில் பெண் காவலர்கள், ஆண்களைக் காட்டிலும் சொல்லிலடங்கா துயரப்படுகின்றனர். "எங்களுக்கான கழிவறைக்கு ஏதாவது ஏற்பாடு செய்து கொடுங்கள்." என்று மன்றாடும் போக்குவரத்து போலீசாருக்கு உதவும் வகையில், கோவையில் உள்ள போக்குவரத்து சிக்னல் ஒன்றில் தற்போது 'பயோ-டாய்லெட்' அமைக்கப்பட்டுள்ளது.

'பயோ-டாய்லெட்' : 



கோவை மருத்துவக்கல்லூரி அருகே அமைந்துள்ள சிக்னலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, தன்னார்வலர்கள் உதவியோடு 'பயோ-டாய்லெட்' அமைக்கப்பட்டது. சிக்னலில் இருக்கும் நிழற்குடையோடு இணைந்த வகையில் அமையப்பெற்ற இந்த பயோ-டாய்லெட் போக்குவரத்து போலீசாருக்கு நிம்மதி கொடுத்தது. இதேபோன்று, மற்ற சிக்னல்களிலும் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருந்தது.

இது தொடர்பாக கோவை மாநகர காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித் குமாரிடம் கேள்வியெழுப்பினோம். இது குறித்து அவர் கூறுகையில், "தன்னார்வ அமைப்பு ஒன்று இந்த பயோ-டாய்லெட் அமைத்துக் கொடுக்க முன் வந்தது. கோவையில் 50 முதல் 70 சிக்னல்கள் வரை உள்ளன. அனைத்து இடங்களிலும் பயோ-டாய்லெட்டுகள் அமைப்பது குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் போலீசாரிடம் கருத்து கேட்டு, ஆலோசித்து வருகிறோம். விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல, வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்து சிக்னல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம். திருச்சி சாலையில் புதிய சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன." என்றார்.

கோவையில் மேம்பால பணிகள் நடைபெறும் இடங்களில் ஏன் போலீசாரை பாதுகாப்பு பணிக்கு அமர்த்தவில்லை..? என்ற கேள்விக்கு அவர் பதிலத்திருப்பதாவது :- கோவையில் 250 பேர் போக்குவரத்து காவல்துறையில் பணிபுரிகின்றனர். இந்த எண்ணிக்கை, இவ்வளவு பெரிய கோவை மாநகர போக்குவரத்து பணிகளை சீர்செய்ய போதுமானதாக இல்லை. அரசிடம், போலீசாரின் எண்ணிக்கையை அதிகப்படுத்தக் கோரிக்கை விடுத்துள்ளோம். இருந்த போதிலும் இருக்கும் குறைந்த போலீசாரை கொண்டு போக்குவரத்தை சீர்செய்யும் பணியை திறம்பட மேற்கொள்வோம், என்றார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...