கோவை : விவசாய நிலத்தில் மின்கோபுரம் அமைக்க அத்துமீறி நுழையும் அரசு அதிகாரிகளைக் கண்டித்து கோவை மாவட்டம் சுல்தான்பேட்டையில் 800-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனமும், தமிழக அரசின் மின் தொடரமைப்பு கழகமும் இணைந்து விவசாய நிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைத்து மின்சாரம் கொண்டு செல்ல திட்டமிட்டனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
கடந்த சில மாதங்களாக பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் அனுமதியின்றி பவர்கிரிட் நிறுவன ஊழியர்கள் நிலஅளவை செய்ய வந்த போது, உயர் மின்கோபுரங்களுக்கு எதிரான கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் போராடி தடுத்தனர்.
இதனிடையே, நில உரிமையாளர் திட்டப் பணிகளுக்கு ஆட்சேபனை தெரிவித்தால், திட்டத்தை நிறைவேற்றும் நிறுவனம் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் இருந்து முன்நுழைவு அனுமதி பெற்ற பின்புதான் நிலத்திற்குள் வரமுடியும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழக அரசுடன் ஏற்கனவே இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, மூன்றாவது கட்டப் பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்டிருக்கும் சூழலில், கோவை மாவட்டத்தில் பவர்கிரிட் நிறுவன ஊழியர்கள் அத்துமீறி நிலம் அளக்கும் பணியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்தும், சட்டவிரோதமாக நிலம் அளக்கும் செயலை நிறுத்தக்கோரியும் 800-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் குடும்பத்தோடு தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை சுல்தான்பேட்டை வெங்கிடராஜ் திருமண மண்டபத்தில் நேற்று இரவு முதல் மேற்கொண்டு வருகின்றனர்.