டெரேமியா விவசாய நிலங்களை சேதப்படுத்திய யானைக் கூட்டங்களை விரட்ட விவசாயிகள் கோரிக்கை

நீலகிரி : குன்னூர் அருகே டெரேமியா பகுதியில் குட்டியுடன் நுழைந்த 4 காட்டு யானைகள் விளை நிலத்தை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்

நீலகிரி : குன்னூர் அருகே டெரேமியா பகுதியில் குட்டியுடன் நுழைந்த 4 காட்டு யானைகள் விளை நிலத்தை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.



நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தூதூர் மட்டம், மஞ்சக்கம்பை, மேலூர் ஒசட்டி, ஒடயரட்டி, கெரடாலீ்ஸ், டெரேமியா உள்ளிட்ட பகுதிகள் குந்தாவனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இப்பகுதிகள் அடர்ந்த தேயிலை தோட்டம், விளைநிலம், வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. மேற்கண்ட பகுதிகளில் தேயிலை தோட்டத்தை முறையாக தோட்ட உரிமையாளர்கள் பராமரிக்காததால் முட்புதர்கள் சூழ்ந்து சோலை போல் காட்சி அளித்து வருகிறது.

இந்நிலையில், மஞ்சக்கம்பை வழியாக ஒடயரட்டி கிராமத்தில் குட்டியுடன் கூடிய 4 காட்டு யானைகள் நுழைந்தன. டெரேமியா பகுதியில் உள்ள 10-ம் நம்பர் எஸ்டேட் அருகே விளைநிலத்தில் நுழைந்து அங்கிருந்த பயிர்களையும், தண்ணீர் மோட்டார்கள், தடுப்புகள், குழாய்கள் ஆகியவற்றை சேதப்படுத்தி சென்றது. 



இதனால், அப்பகுதி பகுதி விவாயிகளுக்கு சுமார் 6 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 10-ம் நம்பர் எஸ்டேட் பகுதி தூதூர் மட்டம், கெரடாலீஸ், அணிமன் உள்ளிட்ட பகுதிகளில் யானைகளுக்கு தேவையான உணவு பொருட்கள் அதிகளவில் இருப்பதால் அவைகள் தொடர்ந்து அந்தப் பகுதிக்கு வர வாய்ப்புள்ளது. எனவே, விவசாயிகள் இந்த யானை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்தவேண்டும் என்று வனத்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...