காவல்துறை துணை கண்காணிப்பாளர் கைப்பேசி திருட்டு : ஜேப்படி கொள்ளையர்கள் கைவரிசை

கோவை : காந்திபுரம் பேருந்து நிலையத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கைப்பேசியைப் பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை : காந்திபுரம் பேருந்து நிலையத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் கைப்பேசியைப் பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளான காந்திபுரம் பேருந்து நிலையம், டவுன்ஹால், உக்கடம் போன்ற பல்வேறு பகுதிகளில் ஜேப்படி கொள்ளையர்கள் அதிக அளவில் நடமாடி வருகின்றனர். இவர்கள் பண்டிகை நாட்களிலும் மற்றும் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் இடங்களிலும் நெரிசலைப் பயன்படுத்தி கைப்பேசி, பணம் உள்ளிட்டவற்றை திருடிச் செல்கின்றனர். மேலும், ஜேப்படி கொள்ளையர்கள் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளை குறிவைத்துச் செயல்படுகின்றனர். 

தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் ஜேப்படி கொள்ளையர்களின் செயல்பாடுகளைப் பேருந்து நடத்துநர்கள் சிலர் கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றனர். இவர்களால் பாதிக்கப்படுபவர்களில் சிலர் மட்டுமே காவல் நிலையங்கள் சென்று புகார் அளிக்கின்றனர். இந்நிலையில், காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ஜேப்படி கொள்ளையர்கள் போலீஸ் உயர் அதிகாரியிடமே தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆக பணியாற்றி வருபவர் ராதாகிருஷ்ணன் (53). ஒரு வழக்கு தொடர்பாக கோவை வந்திருந்தவர், நேற்று ஈரோடு செல்வதற்காக காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார். அந்நேரத்தில் ஈரோடு செல்ல வெளியே வந்த ஒரு பேருந்தில் ஏறினார். பேருந்தில் கூட்ட நெரிசலாக இருந்ததைப் பயன்படுத்தி 15 ஆயிரம் மதிப்பினையுடைய ராதாகிருஷ்ணனின் கைப்பேசியை மர்ம ஆசாமி திருடிச் சென்றார். 

கைப்பேசி திருடப்பட்டதாக அறிந்ததும் ராதா கிருஷ்ணன், அருகில் உள்ள காட்டூர் காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்து தனது புகாரை பதிவு செய்தார். அந்தப் புகாரின்படி, போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சோதனை செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், திருட்டு நடக்கும் போது ராதாகிருஷ்ணன் சீருடையணியாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...