கோவை : வீட்டின் பூட்டை உடைத்துத் தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளியை கோவை போலீசார் கைது செய்ததை அறிந்த திண்டுக்கல் காவல்துறையினர், குற்றவாளியை கஸ்டடி எடுக்க மனு தாக்கல் முடிவு செய்துள்ளனர்.

கோவையில் போத்தனூர், வெள்ளலூர் ,குனியமுத்தூர் மற்றும் கோவைபுதூர் பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொள்ளை சம்பவங்களைத் தடுப்பதற்கும், கொள்ளையர்களைப் பிடிப்பதற்கும் கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் ஐ.ஏ.எஸ் உத்தரவிட்டார். எனவே, போலீசார் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
அந்த கண்காணிப்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சுகுணாபுரம் பகுதியில் தனிப்படை காவல்துறை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அதில் வேலூரைச் சேர்ந்த மணிகண்டன் (41) என்ற ரோபோ மணிகண்டன் மற்றும் அருண்குமார் (22) ஆகிய இருவரையும் அடையாளம் கண்டு விசாரணை செய்தனர்.

இந்த விசாரணையில் மணிகண்டன் மீது தமிழ்நாடு முழுவதும் 40- க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பதும், 3 முறை குண்டர் சட்டத்தில் கைதானவர் என்பதும் தெரியவந்தது. இதேபோல, அருண்குமார் மணிகண்டனுக்குக் குற்ற சம்பவங்களில் உறுதுணையாக இருந்ததும் விசாரணையில் வெளிவந்தது.
தொடர்ந்து, கோவை, திண்டுக்கல், மதுரை , விருதுநகர் ,தஞ்சாவூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. குற்றவாளிகளிடமிருந்து காவல்துறை 16 சவரன் தங்க நகைகள், இரண்டு கார்கள் ,ஒரு மோட்டார் பைக் உள்ளிட்ட 25 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கைப்பற்றியதோடு, இருவர் மீதும் காவல்துறை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில். குற்ற வழக்குகளில் தொடர்புடைய மணிகண்டன் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்த வேலூர் காவல்துறையினர், கோவை வந்து மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணிகண்டனை, வேலூர் பகுதியில் நடைபெற்ற கொள்ளை வழக்குகளுக்காகக் கைது செய்தனர். இதேபோலவே திண்டுக்கல் போலீசாரும் கோவை வந்துள்ளனர். இவர்கள், நீதிமன்றத்தில் மணிகண்டனை கஸ்டடி எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளனர்.