உடல் உறுப்பு தானம் குறித்த தவறான கருத்துக்கள் தவிர்க்கப்பட வேண்டும் - மருத்துவக்கல்வி இயக்குனர் கோவையில் பேட்டி

கோவை: உடல் உறுப்பு தானம் குறித்த தவறான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என கோவை மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ அறிவுறுத்தினார்.


கோவை: உடல் உறுப்பு தானம் குறித்த தவறான கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என கோவை மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ அறிவுறுத்தினார்.

உடல் உறுப்பு தானம் அளிப்பதன் மூலம் பிறரின் ஆயுட்காலத்தை நீடிக்க செய்ய முடியும். ஆனால், இன்று அது குறித்த தவறான கருத்து பரிமாற்றமும், தேவையில்லாத பயமும் மக்களிடையே பரவிக் கொண்டிருக்கிறது.இது குறித்து கோவை அரசு மருத்துவமனை, மருத்துவ கல்வி இயக்குனர் எட்வின் ஜோ செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழகம் தொடர்ந்து நான்காவது முறையாக உடல் உறுப்பு தானத்தில் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. 

இதற்கு காரணம் மக்களிடம் உள்ள விழிப்புணர்தான். அனைத்துத் தரப்பினரும் உடல் உறுப்புதானம் செய்ய முன் வரவேண்டும். தமிழகத்தைப் போல பிற மாநிலங்களிலும் உடல் உறுப்பு தானம் நடக்கிறது. ஆனால், அவர்களிடம் விழிப்புணர்வு குறைவு. தமிழகத்தில் உடல் உறுப்புதானத்தில் எவ்வித ஊழலும் நடக்கவில்லை. 

எனவே, உடல் உறுப்புதானம் குறித்த தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்றன.இதைத் தவிர்க்க வழிவகை செய்ய வேண்டும்", என்றார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...