வால்பாறையில் சினிமா பாணியில் குழு குழுவாக சண்டையிடும் பள்ளி மாணவர்கள் : வைரலாகும் வீடியோவைக் கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சி

கோவை : வால்பாறை பகுதியில் பள்ளி மாணவர்கள் சினிமா பாணியில் ஒருவருக்கொருவர் குழுவாக பிரிந்து கடுமையாக தாக்கிக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளதைக் கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை : வால்பாறை பகுதியில் பள்ளி மாணவர்கள் சினிமா பாணியில் ஒருவருக்கொருவர் குழுவாக பிரிந்து கடுமையாக தாக்கிக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளதைக் கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சினிமாக்களில் வருவது போல மாணவர்கள் குழுக்களாக பிரிந்து தாக்கிக் கொள்ளும் சம்பவங்கள் மாணவர்கள் மத்தியில் அரங்கேறி வருகிறது. இப்படி நடைபெறும் சிறுசிறு அடிதடிகள் நாளை உயிரிழப்புகள் வரை கொண்டு செல்ல வாய்ப்புகள் உள்ளன. இப்படி மாணவர்கள் மத்தியில் நடைபெறும் குழு மோதல்களை பள்ளி நிர்வாகங்கள் கூர்மையாக கவனிக்க வேண்டும்.



கடந்த 24-ம் தேதி வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் ஒருவருக்கொருவர் கையில் கிடைத்த ஆயுதங்களைக் கொண்டு தாக்கிக் கொள்ளும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் இரு குழுவில் உள்ள மாணவர்கள் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொள்வதும், திடீரென படத்தில் வருவது போல, ஒருவர் அடிப்பதும் அடித்தவுடன் குழுவில் உள்ளவர்கள் அனைவரும் எதிரெதிர் குழுக்களை கடுமையாக தாக்கிக் கொள்வதும் இடம்பெற்றுள்ளது. 

இந்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவி வருவதைக் கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பள்ளிக்குச் செல்லும் மாணவன் கல்வி கற்பான் என்று நினைத்து அனுப்பும் பெற்றோர்கள், இதுபோன்று மாணவர்கள் ரவுடித்தனம் பண்ணும் வீடியோக்களை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதில், பல மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். ஆனால் இதுவரை போலீசில் யாரும் புகார் தரவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை மற்றும் உயர் அதிகாரிகள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்து பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நாளை இந்த சமுதாயத்தை காக்கும் தூண்களான மாணவர்கள் பொறுப்புணர்ச்சியுடன், சமூக அக்கறையுடன் வளர ஆசிரியர்களின் பங்கு முக்கியமாக உள்ளது. ஆகவே, பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களின் நடவடிக்கையை கண்காணிக்க தனி ஆசிரியர்களை அமைத்து மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகளை வழங்கினால் மாணவர் சமுதாயங்களில் நடைபெறும் குற்றங்களை தடுக்கலாம்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...