கோவை : கோவை மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சியுடன் இணைந்து பல்வேறு திட்டப் பணிகளை ஜெர்மன் மேற்கொள்கிறது.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில், மாநகராட்சியில் போக்குவரத்து தொடர்பாக பொதுமக்களின் வசதிக்காகப் பணிகள் மேற்கொள்வதற்காக அலுவலர்கள், தன்னார்வலர்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் உதரிபாகங்கள் தயாரிப்பாளர்கள், வட்டார போக்குவரத்து அலுவலக அலுவலர்கள் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கோவை மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள், பொதுமக்களின் வசதிக்காக மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளுதல் மற்றும் லாரிகள் நிறுத்துமிடங்கள், கிடங்கு வசதிகளை அமைத்துத்தருதல், நூதன முறையில் மக்கும், மக்கா குப்பைகளை அகற்றுதல், மாசினைக் குறைக்க மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், வணிக மையங்களில் பலநிலை கார் நிறுத்துமிடங்கள் போன்ற பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான திட்ட அறிக்கையினை தயார் செய்ய மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் கலந்தாய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், ஸ்மார்ட் சிட்டி திட்ட மேலாளர் எம்.சுபாஸ்சந்திரா, அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். மரிலிசா, நிகிடா ஷெட்டி, ஜில்லிலாசத்தியசாய் குமார், ஜெர்மனியைச் சேர்ந்த திஃள். ப்ரான்ஹோபர் நிறுவனத்தார் ஆகியோரும் பங்கேற்றனர்.