திருப்பூரில் ரூ.4 கோடி மதிப்பிலான நிலத்தை கையகப்படுத்தியதாக அ.ம.மு.க. நிர்வாகி மீது புகார்

திருப்பூர் : திருப்பூரில் 4 கோடி மதிப்பிலான நிலத்தை 21 லட்சத்திற்கு அடமானம் செய்வதாகக் கூறி, பத்திரப்பதிவு செய்து கொண்டதாக அ.ம.மு.க. கட்சி நிர்வாகி மீது பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

திருப்பூர் : திருப்பூரில் 4 கோடி மதிப்பிலான நிலத்தை 21 லட்சத்திற்கு அடமானம் செய்வதாகக் கூறி, பத்திரப்பதிவு செய்து கொண்டதாக அ.ம.மு.க. கட்சி நிர்வாகி மீது பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டத்திற்குட்பட்ட சிவன்மலை கரட்டுப்பாளையம் பகுதியில் குடியிருந்து வரும் கமலக்கண்ணன் என்பவர் தனது பூர்விக சொத்தான 10.65 ஏக்கர் நிலத்தை சீர்படுத்தி விவசாயம் மேற்கொள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் நிர்வாகி பார்த்திபன் என்பவரை அணுகியுள்ளார். அவர் கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி மாலை அவசரமாகக் கமலக்கண்ணனின் தாய் மற்றும் பாட்டியையும் அழைத்து சென்று அடமானம் செய்ய கையெழுத்து வாங்கியுள்ளார். பின்னர், அவர்களிடம் 21 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை கொடுத்துள்ளார். 

இதன் பிறகு, இடத்திற்கான பட்டா மாறுதல் தகவல் கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்து வரப்பெற்றதையடுத்து, அதிர்ச்சியடைந்த கமலக்கண்ணன் குடும்பத்தினர் பார்த்திபனிடம் சென்று முறையிட்டுள்ளனர். அப்போது, கமலக்கண்ணன் குடும்பத்திற்கு பார்த்திபன் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த கமலக்கண்ணன் குடும்பத்தினர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நில அபகரிப்பு பிரிவிலும், கோவை பதிவுத்துறை துணைத் தலைவர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்துள்ளனர். 

ரூ. 4 கோடி மதிப்பிலான நிலத்தை வெறும் 21 லட்சம் கொடுத்து அ.ம.மு.க. பிரமுகர் கிரயம் செய்து கொண்டதாக இளைஞர் புகார் மனு அளித்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...