திருப்பூர் : கஜா புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்காக சோலார் மின்விளக்குகள் மற்றும் மருந்துபொருட்களை திருப்பூரைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை அனுப்பி வைத்தது.

கடந்த வாரம் தாக்கிய கஜா புயலால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் பெருமளவு சேதமடைந்தன. இதனால், டெல்டா மாவட்ட மக்கள் தங்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

அதன் ஒருபகுதியாக, திருப்பூர் குமார் நகர் பகுதியில் உள்ள தீபா மருத்துவமனை சார்பில் புயலால் பாதிக்கப்பட்டு மின்சாரம் இல்லாத புதுக்கோட்டை மாவட்டம் மாங்கோட்டை ஊராட்சியில் 1,500 குடும்பங்கள் பயன்பெறக்கூடிய வகையிலான சோலார் மின் விளக்குகள் அரிசி உட்பட நிவாரணப்பொருட்கள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டது. அதோடு, 4 மருத்துவர்கள் தலைமையிலான மருத்துவக் குழுக்களும் மாங்கோட்டை ஊராட்சிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
நாளைய தினம் அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மருத்துவ முகாம்களை அமைக்க இருப்பதாகவும், அதற்கான மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் புதுக்கோட்டை நோக்கி சென்றனர். இதனை இந்திய மருத்துவக் கழகத்தினைச் சேர்ந்த முருகநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.