திருப்பூர் : திருப்பூர் அருகே பள்ளிக்கூடத்தை ஒட்டி சாக்கடை செல்வதால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயம் இருப்பதாகக் கூறி பள்ளி மாணவ, மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அங்கேரிபாளையம் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டியுள்ள சாக்கடை கால்வாய் நிரம்பி வழிந்தோடுவதால், கழிவுநீர் பள்ளிக்குள் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளியில் அமர்ந்து கல்வி கற்க முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுவதாகவும், தொற்றுநோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் கூறி பள்ளி மாணவ, மாணவிகள் பெற்றோர்களோடு அங்கேரிபாளையம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறை தொட்டிகள் உடைந்து கழிவுநீர் செல்ல வழி இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் அனுப்பர்பாளையம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதைத் தொடர்ந்து, மாநகராட்சி துப்புரவு பணியாளர்களை வரவழைத்து சுத்தம் செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.