உதகையில் தேயிலை அரவை இயந்திரத்தில் சிக்கி வடமாநில தொழிலாளி பலி

நீலகிரி : உதகையில் செயல்பட்டு வரும் தனியார் தேயிலை தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த வடமாநில தொழிலாளி ஒருவர், தேயிலை அரவை இயந்திரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

நீலகிரி : உதகையில் செயல்பட்டு வரும் தனியார் தேயிலை தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த வடமாநில தொழிலாளி ஒருவர், தேயிலை அரவை இயந்திரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

உதகையை அடுத்த கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு தனியார் தேயிலை தொழிற்சாலையில் அஸ்ஸாம் மாநிலம் சிப்சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கர் கொகாய் (23) என்பவர் கடந்த ஆண்டு முதல் பணிபுரிந்து வந்தார். இவர் வழக்கம் போல, பச்சை தேயிலையை அறுத்து தூளாக்கும் இயந்திரத்திற்கு அடியில் இருந்து கொண்டு, அரவை இயந்திரத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அவரது தலையில் கட்டியிருந்த துண்டு எதிர்பாராதவிதமாக இயந்திரத்தின் பெல்டில்பட்டு அவரை இழுத்துச் சென்றது.



இதில், பாஸ்கர் கொகாயின் தலை துண்டானது, மேலும், அவரது உடலும் நசுங்கியது. இவரது அலறல் சத்தம் கேட்டு உடன் பணிபுரிபவர்கள் விரைந்து வந்து இயந்திரத்தை ஆப் செய்து உடலை மீட்டனர். இருப்பினும், தலை துண்டானதால், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கோத்தகிரி காவல் துணை ஆய்வாளர் நசீர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவம் குறித்து கோத்தகிரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...