கோவை : விவசாயிகளின் பயன்பாட்டிற்காக ஆழியாறு அணையிலிருந்து தண்ணீரை தமிழக சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் மலர் தூவி திறந்து வைத்தார்.

பொள்ளாச்சி கோட்டத்திற்குட்பட்ட ஆழியாறு அணையில் இன்று விவசாயிகளின் பயன்பாட்டிற்காக தண்ணீர் திறந்து விடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பாசன வாய்க்கால்களுக்கு மலர் தூவி தண்ணீரை திறந்து வைத்தார்.
தொடர்ந்து, அவர் பேசியதாவது :- கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு அணையிலிருந்து ஆழியாறு பழைய ஆயக்கட்டு இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி ஆழியாறு பழைய ஆயக்கட்டு விவசாயிகள் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்கள் தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களின் வேண்டுகோளினை ஏற்று, ஆழியாறு 5 பழைய வாய்க்கால்களின் மூலம் பாசனம் ஆனைமலை பகுதியில் பாசனம் பெறும் 6,400 ஏக்கர் நிலங்களின் இரண்டாம் போக பாசனத்திற்கு இன்று முதல் 15.04.2019 முடிய 139 நாட்களுக்கு 961 மி.க. அடிக்கு மிகாமல் ஆழியாறு அணையிலிருந்து ஆற்று மதகு மூலம் தண்ணீர் திறந்துவிடப்படுகின்றது.
இதன்மூலம், ஆனைமலை பகுதியில் உள்ள 6,400 ஏக்கர் நிலங்கள் பழைய பாசனப் பகுதியில் நெல், வாழை மற்றும், கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன், இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரிவாசு, பொள்ளாச்சி சார் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.