நீலகிரி : உதகை அரசு தலைமை மருத்துவமனை தடுப்பு சுவர் இடிந்து விழுந்து சம்பவத்தில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டாலும், இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், கடந்த 3 நாட்களாக நல்ல வெயில் அடித்து வருகிறது. மழை பெய்ததன் காரணமாக உதகை அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள தடுப்பு சுவர் சேதமடைந்து காணப்பட்டது. இந்த நிலையில், இன்று எதிர்பாராதவிதமாக தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. இதில், தடுப்பு சுவர் கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மண்ணில் புதைந்து சேதமடைந்தன. தடுப்புசுவர் இடிந்து விழும் சமயத்தில் அப்பகுதியில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் பல பகுதிகளில் இருந்து உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சை மேற்கொள்ள அதிக பேர் வந்து செல்லும் சூழலில், போதிய பராமரிப்பு இல்லாமல் அரசு தலைமை மருத்துவமனை இருப்பது அனைவரையும் கவலையடையச் செய்துள்ளது.