கோவை: கோவை அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை வருகை பதிவை செயல்படுத்தும் உத்தரவைப் பற்றி ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு வருவதாக மாவட்ட தலைமை கல்வி அலுவலர் அய்யணன் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக தமிழகரசு கல்வித் துறையில் மாணவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஆசிரியர்களுக்காக பயோமெட்ரிக் முறை வருகை பதிவு திட்டம் வரப்போவதாக அறிவித்தார். இதன்படி, விரைவில் 7,728 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், பிரபல ஊடகத்தில் கோவையில் உள்ள 60 பள்ளிகளில் விரைவில் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவெடுக்க போவதாகச் செய்தி வெளிவந்தது. இது குறித்து, சி.இ.ஓ அய்யணன் கூறுகையில், "பயோமெட்ரிக் முறை வருகை பதிவை செயல்படுத்தும் திட்டம் பற்றிய எந்தத் தகவலையும் இதுவரை நாங்கள் பெறவில்லை. ஊடகங்கள் யூகத்தில் செய்திகள் வெளியிட்டுள்ளன", என்றார்.