நீலகிரி : யானைகள் வழித்தடம் தொடர்பான வழக்கில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நீலகிரி : யானைகள் வழித்தடம் தொடர்பான வழக்கில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் அருகே உள்ள மசினகுடி, பொக்காபுரம், வாழைத்தோட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானைகள் வழித்தடத்தில், முறையான அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த விடுதிகளுக்கு சீல் வைக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2009ம் ஆண்டு யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு 2011-ம் ஆண்டு வெளியான நிலையில், விடுதி உரிமையாளர்கள் ஒன்றிணைந்து சீல் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றனர். தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருந்தது.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம், யானைகள் வழித்தடத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வரும் விடுதிகளுக்கு 24 மணி நேரத்தில் நோட்டீஸ் விநியோகித்து, 48 மணி நேரத்திற்குள் சீல் வைக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், ஆகஸ்ட் மாதம் 39 விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய முயற்சி நடப்பதாக முறையிட்ட போது, ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.