நீலகிரி : உதகையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள தெற்காசிய அளவிலான குறும்பட விழாவில் முதல் 5 இடங்கள் பிடிக்கும் படங்களுக்கு இயக்குநர் பாரதிராஜா விருது வழங்கவுள்ளார்.
நீலகிரி : உதகையில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள தெற்காசிய அளவிலான குறும்பட விழாவில் முதல் 5 இடங்கள் பிடிக்கும் படங்களுக்கு இயக்குநர் பாரதிராஜா விருது வழங்கவுள்ளார்.

கோவா போன்ற சுற்றுலாத்தலங்களில் நடைபெறும் திரைப்பட விழாக்களைக் காண பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள். அதே போலவே, நீலகிரியைக் காண வரும் சுற்றுலா பயணிகளுக்காக உதகையில் மூன்று நாட்கள் குறும்பட விழா நடத்தப்படுகிறது.
மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இக்குறும்பட விழாவில் இந்தாண்டு இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து 90 படங்கள் திரையிடப்படவுள்ளன. இவ்விழாவினை, உதகை அசெபம்ளி திரையரங்கில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, இயக்குநர் ராம், திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் டிசம்பர் 7-ம் தேதி தொடங்கி வைக்கின்றனர்.
இவ்விழாவில் 12 மணி நேரம் குறும்பட திரையிடலும், 4 மணி நேரம் திரையுலக ஆளுமைகளுடன் கலந்துரையாடலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடந்து மூன்று நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்நிகழ்ச்சியில், 90 குறும்படங்கள் திரையிடப்படவுள்ளது. மேலும், மூன்றாம் நாளான 9-ம் தேதி அன்று முதல் ஐந்து இடங்களைப் பிடிக்கும் குறும்படங்களுக்கு இயக்குநர் பாரதிராஜா தங்கயானை விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கவுள்ளார்.