பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி மரக்கன்றுகளை வளர்க்கக் கூடாது : தமிழக வனத்துறைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவு

கோவை : பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி மரக்கன்றுகளை வளர்க்கக் கூடாது என்று தமிழக வனத்துறையினருக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கோவை : பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி மரக்கன்றுகளை வளர்க்கக் கூடாது என்று தமிழக வனத்துறையினருக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

காடு வளர்ப்பு திட்டம், சமூக காடுகள் வளர்ப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு மரப்பயிர் வளர்ப்பு திட்டங்களுக்காக வனத்துறை நர்சரி கார்டன் என்னும் நாற்றங்கால் தோட்டங்களை அமைத்து மரக்கன்றுகளை உருவாக்கி வருகின்றனர்.

இதற்கென காடுகளில் கிடைக்கும் தரமான மண் மற்றும் விதைகளை கொண்டு மரக்கன்றுகள் தயார் செய்யப்படுகின்றன. எளிதில் கிடைக்காத அடர்ந்த வனத்தில் மட்டுமே காணக்கிடைக்கும் அரியவகை மர வகைகளை சேர்ந்த கன்றுகளைக் கூட வனத்துறையினர் உற்பத்தி செய்து பல்வேறு இடங்களில் நட்டு வருகின்றனர்.

பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தங்களது நிலங்களில் மரம் வளர்க்க விரும்புவோர் சம்பந்தப்பட்ட வனச்சரக அலுவலகத்தை அணுகி முறையாக விண்ணப்பித்தால் இலவசமாக தரமான மரக்கன்றுகளைப் பெறலாம். மேலும், வன விரிவாக்கம் மற்றும் யானை, மான், காட்டெருதுகள் போன்ற வன உயிரினங்களின் உணவு தேவைக்காக காடுகளுக்குள் வளர்க்கப்படும் தீவனத்தோட்டம் போன்ற திட்டங்களுக்காகவும், ஆயிரக்கணக்கான மரக்கன்றுகளை வனத்துறையினர் தயார் செய்கின்றனர். 

இதற்கென சமூக காடுகள் வளர்ப்பு திட்டத்துறை என தனியாக வன அதிகாரிகள் மற்றும் வன ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்திய அரசின் நிதி ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. 

இவ்வகையில் வனத்துறையினரால் தயார் செய்யப்படும் மரக்கன்றுகள் அனைத்தும் பாலிதீன் என்னும் பிளாஸ்டிக் கவர்களில் மண் நிரப்பி அதில் விதைகளிட்டு சிறுசிறு கன்றுகளாக உருவாக்கப்படுகின்றன. 

கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் உள்ளிட்ட ஏழு வனச்சரகத்தில் மட்டும் 2018 - 2019 ஆம் ஆண்டுக்கான காடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக்கவர் பயன்பாட்டில் சுமார் 1.25 லட்சம் மரக்கன்றுகள் தயார் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளன என்ற நிலையில், தமிழகம் முழுவதும் பல லட்சம் மரக்கன்றுகள் இதே முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பிற்கென உள்ள வனத்துறை இதுபோன்று எளிதில் மக்காத பிளாஸ்டிக் கவிர்களை பயன்படுத்தலாமா என்ற கேள்வியும், இம்மரக்கன்றுகளை நடவு செய்வோர் முறையாக இந்த பிளாஸ்டிக் மிச்சத்தை அப்புறப்படுத்துவதில்லை என்பதால் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கும் இவை காரணமாகிறது என்ற குற்றச்சாட்டும் பல ஆண்டுகளாக இயற்கை ஆர்வலர்களால் முன்வைக்கப்பட்டு வந்தது. 

இந்த நிலையில், தற்போது, மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் தமிழகம் மற்றும் அனைத்து மாநில வனத்துறையினருக்கும் அறிக்கையொன்று அனுப்பட்டுள்ளது. அதில், “இனிமேல் வனத்துறை சார்பில் காடுகள் வளர்ப்பு உள்ளிட்ட திட்டங்களுக்கு தயாரிக்கப்படும் மரக்கன்றுகளுக்கு பிளாஸ்டிக் பைகளை உபயோகிக்கக் கூடாது. இதற்கு மாற்று வகைகளைக் கண்டறிந்து மரக்கன்றுகளை தயார் செய்யவேண்டும். வரும் 2022-ம் ஆண்டுக்குள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழித்து பிளாஸ்டிக் இல்லா நாடு என்ற இலக்கின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



இதனை வரவேற்றுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் தயார் செய்யப்படும் மரக்கன்றுகளை மண்ணால் செய்யப்பட்ட குடுவைகள் மற்றும் தென்னையோலையால் பின்னப்பட்ட சிறு சிறு கூடைகளையோ பயன்படுத்தினால் பண்பாண்டம் செய்வோர் விவசாயிகள் பயன் பெறுவார்கள், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்பட்டு மரம் வளர்ப்பிற்கான முழு நோக்கமும் நிறைவேறும், என்றனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...