தகாத உறவுப் பெண்ணை எரித்துக் கொலை செய்த வழக்கு : குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை விதிப்பு

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் தகாத உறவுப் பெண்ணை எரித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் தகாத உறவுப் பெண்ணை எரித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 



மதுரையைச் சேர்ந்த சிவா என்ற கட்டிட தொழிலாளிக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. இதேபோல, திருச்சியை சேர்ந்த சித்ரா கட்டிட தொழிலாளி. இவருக்கும் திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் சரவணன் மற்றும் சித்ரா ஆகிய இருவரும் ஒரே கட்டிடத்தில் கட்டிட வேலை பார்த்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறியது. இதனால், தங்களது குழந்தைகளை பிரிந்து திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் ஒரே குடும்பமாக தங்கி வசித்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆத்திரம் அடைந்த சரவணன், சித்ரா மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சரவணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்த வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதன் இறுதி விசாரணை இன்று நடைபெற்றது. 



வழக்கு விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி சரவணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 2,000 அபராதமும் விதித்து மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி தீர்ப்பளித்தார். மேலும், அபராதத் தொகையை கட்டத்தவறினால், மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, குற்றவாளி சரவணனை போலீசார் சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...