கோவை : இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உட்பட சில இந்து அமைப்பு தலைவர்களை கொல்லச் சதி திட்டம் தீட்டியதாக 7 பேருக்கு நீதிமன்ற காவலை நீட்டிக்கக் கோரி அரசு தரப்பில் வக்கீல் மனு அளித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த ஜாபர் சாதிக்அலி, இஸ்மாயில், சம்சுதீன்,சலாவுதீன், கோவையைச் சேர்ந்த ஆசிக், அன்வர்,பைசல், ஆகியவர்கள் இணைந்து இந்து இயக்கப் பிரமுகர்களை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக கோவை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கடந்த செப்டம்பர் மாதம் 2-ம் தேதி கைது செய்யப்பட்ட இவர்கள் மீது, சட்டவிரோத தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேலும், இவர்கள் மீது சட்ட விரோத தடுப்பு (உபா) வழக்குப் பதிவு செய்து, தேசிய புலனாய்வு பிரிவு விசாரணைக்கு எடுத்துள்ளது. நேற்று கோவை மாவட்ட முதன்மை கோர்ட்டில் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் அரசு தரப்பு வக்கீல் ஆறுமுகம் மனு தாக்கல் செய்தார். அதில், சட்டவிரோத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் 180 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் உள்ளது.
எனவே, கைதானவர்களுக்கு நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட வேண்டும், என குறிப்பிடப்பட்டிருந்தது. இம்மனு குறித்த விசாரணை இன்று நடைபெறவிருக்கிறது.