திண்டுக்கல் : பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் செய்வாய் கிழமை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில், பக்கதர்கள் காணிக்கை ரூ.1.80 கோடியைத் தாண்டியது.
திண்டுக்கல் : பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் செய்வாய் கிழமை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில், பக்கதர்கள் காணிக்கை ரூ.1.80 கோடியைத் தாண்டியது.
தமிழகத்தின் முதன்மைக் கோயிலான திண்டுக்கல், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் எப்போதும் அதிக காணிக்கையால் நிரம்பக்கூடியது.
இந்த முறையும் 28 நாட்களில் நிரம்பியதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணும் பணியில் 500-க்கு மேற்பட்ட கல்லூரி மாணவியர், ஆசிரியர்கள், திருக்கோயில் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதில் பக்தர்கள் காணிக்கை வரவு ரொக்கமாக ரூ. 1 கோடியே 88 லட்சத்து 59 ஆயிரத்து 110 கிடைத்தது. தங்கத்தாலான வேல், பட்டை, தாலி, மோதிரம், செயின், தங்கக்காசு போன்றவையும் வெள்ளியாலான பிஸ்கட், காசுகள், சிறிய வீடு, தொட்டில், வேல், கொலுசு, பாதம் போன்றவற்றையும் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனர்.
தங்கம் 815 கிராமும், வெள்ளி 10 ஆயிரத்து 240 கிராமும் இருந்தது. மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் கரன்சிகள் 744 எண்ணிக்கையிலும் கிடைத்தன.
மேலும், பித்தளை வேல், ரிஸ்ட் வாட்ச், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தியிருந்தனர்.