கோவை : நரசிபுரம் அருகே உள்ள நொய்யல் ஆற்றுப்படுகையில் கழுதைகளை பயன்படுத்தி இரவு, பகலாக மணல் கடத்தப்படுகிறது.

பல வருடங்களாகவே சட்டத்திற்கு புறம்பாக ஆலந்துறை, நரசிபுரம், தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து நொய்யல் ஆற்றுப்படுகையில் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இதைத் தடுக்க சமூக ஆர்வலர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து புகார் கொடுத்தனர்.
அந்தப் புகாரின் பேரில் விதிமுறைகளை மீறி மணல் எடுப்போர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் எச்சரித்தார். அந்த எச்சரிக்கையினால் சிறிது காலம் மணல் கொள்ளை சம்பவங்கள் குறைந்தது. ஆனால், சில நாட்களாக நரசிபுரம் அருகே மணல் கொள்ளைகள் அதிகரித்து வருகின்றன.
மேலும், நொய்யல் ஆற்றுப்படுகையில் கழுதைகள் மற்றும் வாகனங்களை வைத்து 24 மணி நேரமும் மணல் கொள்ளை தொடர்ந்து நிகழ்கிறது. முன்பு இரவு நேரங்களில் மணலைக் கடத்தி வந்த கும்பல், தற்போது பகலில் கழுதைகளை வைத்து மணல் கொள்ளையில் ஈடுபடுகிறது.
மாவட்ட ஆட்சியர் அறிவித்த 7 மாதங்களிலேயே நொய்யலில் மீண்டும் மணல் கொள்ளை நடப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.