நீலகிரி : உதகையில் அதிகாலையில் பொழியும் உறைபனி தொடர்ந்தால் தேயிலை செடிகள் கருகி விடும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
நீலகிரி : உதகையில் அதிகாலையில் பொழியும் உறைபனி தொடர்ந்தால் தேயிலை செடிகள் கருகி விடும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
குளிர்காலம் தொடங்கியது முதலாக நீலகிரியில் கடும் குளிர் நிலவி வருகிறது. அந்நிலையில், இன்று காலை உதகை, தலைகுந்தா, குதிரைப் பந்தய மைதானம், தேயிலை தோட்டங்கள், காய்கறி தோட்டங்கள் அனைத்தும் உறைபனிப் பொழிவினால் மினி காஷ்மீர் போலக் காட்சியளித்தது. இப்பொழிவினால் ஏற்பட்ட கடும் குளிரினால் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் வாசிகளும் அவதிக்குள்ளாகினர்.
வழக்கமாக டிசம்பர் முதல் வாரத்தில் தொடங்க வேண்டிய உறைபனி, இந்த முறை சற்று முன்னதாகவே தொடங்கியுள்ளது. இதே போல உறைபனிப் பொழிவு தொடர்ந்தால் தேயிலை செடிகள் கருகி விடும் அபாயம் உள்ளதென விவசாயிகள் அச்சம் கொள்கின்றனர்.
மேலும், இந்த உறைபனிக் காலம் ஜனவரி மாதம் இறுதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.