கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் ரயிலில் கொண்டு செல்வதற்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்படும் நிவாரண பொருட்களுக்கு டிச.,10-ம் தேதி வரையில் சரக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ரயில் மூலம் கொண்டு வரப்படும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நிவாரண பொருட்கள் சரக்கு ரயிலில் கொண்டு செல்ல கட்டண விலக்கு கோரி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.