நீலகிரி : உதகை நகராட்சி மற்றும் கேத்தி பேரூராட்சி ஆகிய பகுதிகளில் ரூ. 78.50 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கம்மந்து முதல் கெரடா கிராமம் வரை சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 1.50 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட கான்கிரீட் நடைபாதை பணியினையும், தொட்டண்ணியில் ரூ. 1 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட தடுப்புசுவருடன் கூடிய நடைபாதை பணியினையும், கேத்தொரை பகுதியில் ரூ. 1.50 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட குழாய் அமைக்கும் பணியினையும் மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார்.
மேலும், காந்திநகர், இந்திரா நகர், உல்லாடா, அச்சனக்கல், சாந்தூர், பழைய அருவங்காடு, தேனலை கிராமம், சோகத்தொரை, சக்கலட்டி ஆகிய பகுதிகளில் தலா ரூ. 1.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 10 குதிரைத் திறன் மற்றும் 7.5 குதிரைத்திறன் கொண்ட திறந்தவெளி நீர்இறைக்கும் இயந்திரத்தினையும் என மொத்தம் ரூ. 17.50 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை அவர் ஆய்வு செய்தார்.
முன்னதாக, உதகை நகராட்சிக்குட்பட்ட காந்தள் முக்கோணம் பகுதியில் ரூ. 46 லட்சம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ், குப்பைகளை மறுசுழற்சி செய்வதற்கு கட்டப்பட்டு வரும் கூடத்தினையும், ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் படகு இல்லத்தில் குப்பைகள் கொட்டாமல் தடுப்பதற்காக கட்டப்பட்டு வரும் தடுப்பு வேலிகளையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, உதவி இயக்குநர் மனோரஞ்சிதம், உதகை நகராட்சி பொறியாளர் ரவி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.